- ராஜஸ்தான்
- பஞ்சாப் கிங்ஸ்
- முள்ளன்பூர்
- ஐபிஎல் லீக்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- மகாராஜா யதீந்திர ஸ்டேடியம், ராஜ
- தவான்
- தின மலர்
முல்லன்பூர்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் 5வது வெற்றியை பதிவு செய்தது. மகாராஜா யாதவிந்த்ரா அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. தவானுக்கு பதிலாக சாம் கரன் தலைமையில் பஞ்சாப் களமிறங்கியது. அதர்வா, பேர்ஸ்டோ இணைந்து பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். ராயல்ஸ் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதர்வா 15, பிரப்சிம்ரன் 10, பேர்ஸ்டோ 15, சாம் கரன் 6, ஷஷாங்க் சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, பஞ்சாப் 12.1 ஓவரில் 70 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ஜிதேஷ் 29 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டன் 21 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.
கடைசி கட்டத்தில் அசுதோஷ் ஷர்மா அதிரடியில் இறங்க, பஞ்சாப் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. அசுதோஷ் 31 ரன் (16 பந்து, 1 பவுண்டரி. 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் அவுட்டானார். பஞ்சாப் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆவேஷ் கான், மகராஜ் தலா 2, சாஹல், குல்தீப் சென், போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19 .5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 39 ரன் (28 பந்து, 4 பவுண்டரி) விளாசினார்.ஹெட்மெயர் 27 ரன், தனுஷ் கோட்டியன் 24 ரன் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 2 விக்கெட்,சாம் கரன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
The post ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம் appeared first on Dinakaran.