×

ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் பலி: ஆசாமி சுட்டுக் கொலை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பரபரப்பான ஷாப்பிங் மாலில் நடந்த சரமாரி கத்தி தாக்குதலில் 6 பேர் பலியாகினர் இதில் தாக்குதல் நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி ஜங்ஷன் பகுதியில் பிரபலமான ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. அங்கு நேற்று வழக்கம் போல் மக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது திடீரென கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதில் பொதுமக்களில் 6 பேர் பலியாகினர்.

குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்த விரைந்த நியூ சவுத் வேல்ஸ் போலீசார் உடனடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் தரப்பில் ஒருவன் மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும், நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை, இறந்த ஆசாமி குறித்து விசாரணை நடக்கிறது. இது தீவிரவாத சம்பவமா என்பது குறித்து தற்போதைக்கு மறுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் பலி: ஆசாமி சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Sydney ,Australia ,Bondi Junction ,Sydney, Australia ,Dinakaran ,
× RELATED இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்