×

மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம் எதிரொலி : ஓலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு சேவை பாதிப்பு ; சைபர் தாக்குதல் கிடையாது என விளக்கம்!!

சிட்னி: மைக்ரோசாப்ட் மென்பொருள் சிக்கலுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தகவல் தெரிவிட்டுள்ளது. உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் உலகளாவிய செயலிழப்பை சந்தித்து வருவதாக மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தியது. மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட அனைத்து சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மென்பொருள் செயலிழந்ததால் சர்வதேச அளவில் வங்கி, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்,

பாரிஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு சேவை பாதிப்பு முடங்கியது

விண்டோஸ் மென்பொருள் சேவை முடக்கத்தால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகள் முடங்கின. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவின் இணையதள பக்கங்கள் செயலிழந்துள்ளன.

விண்டோஸ் முடங்கியதால் விமான சேவை நிறுத்தம்

விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பாதிப்பால் விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பிரச்னையால் இதுவரை உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமானம் வருகை, புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஜெர்மனியில் 92, இத்தாலியில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மென்பொருள் பிரச்னையால் இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் முடக்கம் – அவசர கூட்டத்திற்கு ஆஸ்திரேலியா அழைப்பு ஏற்பட்டுள்ளது

விண்டோஸ் மென்பொருள் சேவை முடங்கிய நிலையில் அவசர கூட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை முடங்கியதால் விமான, தொழில்நுட்ப சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. விண்டோஸ் பிரச்சனையால் ஆஸ்திரேலியாவில் வங்கி, மின்னணு ஊடகங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வர் பிரச்னை- மைக்ரோசாஃப்ட் விளக்கம்

தொழில் நுட்ப பிரச்சனை விரைவில் சீராகும் என்று நம்புவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய சிக்கலுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று மைக்ரோசாஃப்ட் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்தார்.

சர்வர் கோளாறு சைபர் தாக்குதல் அல்ல: பிரெஞ்சு சைபர் பாதுகாப்பு ஏஜென்சி

உலகளவில் ஏற்பட்டுள்ள சர்வர் கோளாறு சைபர் தாக்குதல் கிடையாது என பிரெஞ்சு சைபர் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதல் என்பதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவித்தது.

மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்: இண்டிகோ

சர்வர் கோளாறு பிரச்னையில் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் கோளாறு எலான் மஸ்க் விமர்சனம்

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விமர்சித்து எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். Macrohard >>Microsoft என 2021ல் வெளியிட்ட பதிவை எலான் மஸ்க் மறுபதிவு செய்துள்ளார்.

The post மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம் எதிரொலி : ஓலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு சேவை பாதிப்பு ; சைபர் தாக்குதல் கிடையாது என விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Sydney ,Microsoft ,United States ,Australia ,India ,Dinakaran ,
× RELATED சர்வதேச தொழில் நகரமாக முன்னேறும்...