- இந்தியா
- தேஜாஸ்வி யாதவ்
- பீகார்
- ராஷ்ட்ரிய ஜனதா தளம்
- தேஜஸ்வி யாதவ்
- ஆர்ஜேடி
- மக்களவை
- இந்தியா கூட்டணி
- தின மலர்
பீகார்: பீகாரில் நிறைவேற்ற உள்ள 24 வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார். மக்களவை தேர்தலில் I.N.D.I.A கூட்டணியில் இணைந்து போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பீகாரில் நிறைவேற்ற உள்ள வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக பாட்னாவில் வெளியிட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பை பயன்படுத்தி 24 வாக்குறுதிகளுடன் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை பத்திரம் என்ற தலைப்பில் அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மூத்த தலைவர்களுடன் சேர்ந்து வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர் ஒன்றியத்தில் I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு விடுமுறை வழங்கப்படும் என்றார். வேலை வாய்ப்பு வழங்கும் பணி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்கிவிடும் என்று உறுதியளித்த அவர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு உட்படுத்தப்படும் என்று கூறினார். ரக்ஷா பந்தனின் போது ஏழை சகோதரிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், சமையல் எரிவாயு விலை 500ஆக குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார்.
மாநிலத்தின் வளர்ச்சியின் அடிப்படையாக வைத்து முக்கிய பிரச்சனைகள் சார்ந்து வாக்குறுதிகளை அளித்திருப்பாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். அது மட்டுமின்றி பீகாரில் பர்ணியா, பகல்பூர், முஸாபர் நகர், கோபால் கஞ்ச் உள்ளிட்ட 5 நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் 200 யூனிட் இலவச மின்சாரம் 10 பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் போன்ற வாக்குறுதிகளையும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. அக்நிவீர் திட்டம் ரத்து மண்டல் கமிஷன் மீதமுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தப்படும், பணியின் போது உயிரிழக்கும் துணை ராணுவ படையினருக்கு வீர மரணமடைதோருக்கான அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அக்கட்சி அறிவித்துள்ளது.
The post இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர்: தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.