- நீலகிரி நாடாளுமன்ற தொகுதி
- பாஜக
- எல்.முருகன்
- நீலகிரி பாராளுமன்றம்
- மத்திய அமைச்சர்
- குடலூர்
- நீலகிரி
- தின மலர்
ஊட்டி : நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் கூடலூரில் நேற்று பழங்குடியின மக்களுடன் நடனமாடி தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் எல்.முருகன் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜ வேட்பாளர் எல்.முருகன் நேற்று கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியான அவ்வூரில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகப்படியாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு விசு வாழ்த்துகள் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 6000 வழங்கும் திட்டம், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தேசத்தின் ஜனாதிபதியாக்கியதன் மூலம், பெண்களுக்கான முக்கியத்துவமும் பறைசாற்றப்பட்டுள்ளது என்ற அவர் தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு எல்.முருகன் தேர்தல் பரப்புரையின் போது பேசினார். அப்பகுதியில் பிரசாரம் முடித்து அவர் கிளம்பிய போது, இடையில் நடனமாடிய பழங்குடியின மக்களோடு சேர்ந்து, அவர்களுடைய பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது இந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு எல்.முருகன் உரையாற்றினார்.
The post நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் எல்.முருகன், பழங்குடி மக்களுடன் நடனமாடி ஆதரவு திரட்டினார் appeared first on Dinakaran.