பாஜவினரின் தாக்குதலை நேரில் பார்த்த ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயராகவன் கூறுகையில், ‘அண்ணாமலை தேர்தல் விதியை மீறி இரவு 10.45 மணி அளவில் இப்பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் திமுகவினர், இப்படி விதி மீறி நடக்கும் இந்த பிரசாரத்தை தடை செய்ய வேண்டும் என அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம்தான் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது, அருகில் இருந்த அண்ணாமலை கண் அசைவால், அங்கு திரண்டிருந்த பாஜவினர் பொதுமக்கள் மீதும், திமுகவினர் மீதும் தாக்குதல் நடத்தினர். 5 பேரை ஓட ஓட விரட்டி அடித்தனர். 21 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் மது போதையில் இருந்தனர். அவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தினர். மக்கள் பாஜவினரை விரட்டி அடிக்க வேண்டும். அண்ணாமலை இந்த மண்ணில் ஜெயித்தால், நம் பிள்ளைகள் அபாயகரமான சூழலுக்கு செல்வார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
முழுக்க முழுக்க பாஜ இந்த மண்ணில் வேரூன்ற முடியாத அளவுக்கு வருகிற 19ம் தேதி தங்களது வெறுப்பை காட்ட வேண்டும். ஏற்கனவே, பாஜவில் முழுக்க முழுக்க ரவுடிகள்தான் இருக்கிறார்கள். இப்போது கேள்வி கேட்கிற மக்களை அடிக்கிறார்கள் என்றால், அது ஒடுக்குமுறைதானே, பயங்கரவாதம்தானே. அதனால், அவர்கள் இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
The post அண்ணாமலை கண் அசைவால் போதையில் வாலிபர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.