- எடப்பாடி
- சசிகலா
- காங்கிரஸ்
- விஷ்ணு பிரசாத்
- கடலூர்
- திமுக
- நாஞ்சில் சம்பத்
- ஸ்ரீபெரும்புதூர்
- ஆந்திரப் பிரதேசம்
- ஸ்டாலின்
- மோடி…
- முதல் அமைச்சர்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: கொரோனா காலக்கட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் ஆந்திராவுக்கு சென்றது. இதனை அறிந்த ஸ்டாலின் மோடியை தொடர்பு கொண்டு எங்கள் மாநிலத்தில் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜனை எங்கள் மக்களுக்கே பயன்படுத்த வேண்டும் என கேட்டு தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டாலின் வழங்கினார். இப்படி ஒரு தொழிற்சாலை இருந்ததே எடப்பாடிக்கு தெரியாது. முதலில் ஆக்சிஜன் பற்றி அவருக்கு தெரியாது. முதலமைச்சர் பதவிக்காக சசிகலாவை காட்டிக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. கூவத்தூரில் நாற்காலிக்கு அடியில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியைப் பெற்றவர் அவர். பாஜவிடம் அதிமுகவை அடகு வைத்தவர். இவ்வாறு அவர் கூறினார்.
The post முதல்வர் பதவிக்காக சசிகலாவை காட்டிக் கொடுத்தவர் எடப்பாடி: நாஞ்சில் சம்பத் ஓபன் டாக் appeared first on Dinakaran.