×

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மேற்குவங்கத்தில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது


கொல்கத்தா: பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி சில நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் மாநில அரசு ஒப்படைத்தது.

இது தொடர்பாக ஏற்கனவே நடந்த மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர். இதனிடையே வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்படைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மேற்குவங்கத்தில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Rameshwaram ,Bangalore ,Rameshwaram Cafe ,Kundalahalli, Bangalore ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...