×

ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர் மாளிகையில் மோடி ரகசிய ஆலோசனை: தேர்தல் விதி மீறியதால் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி

மீஞ்சூரில் இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பிரசாரக்கூட்டம் நடந்தது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
பிரதமரின் ரோடு ஷோ கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் வடமாநிலத்தவர்கள். தமிழ்நாட்டிற்கு பாஜ வாக்கு கேட்டு பிரசாரத்திற்காக வந்த பிரதமர் மோடி, தேர்தல் விதிகளை மீறி நேற்றுமுன்தினம் இரவு ராஜ்பவனில் தங்கினார். தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது. சாதாரண கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் தங்களது அலுவலகத்திற்கு கூட செல்ல முடியாத வகையில் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராஜ்பவனில் தங்கி பாஜ நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஒன்று போதும், பிரதமர் மோடியை நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

தொடர்ந்து பிரதமர் மோடி குடும்ப அரசியல் குறித்து பேசி வருகிறார், எங்களுக்கு குடும்பம் உள்ளது. கட்டிய மனைவிக்கே சோறு போடாதவர், நீங்கள் ஏன் குடும்பத்தை பற்றி பேசுகிறீர்கள். திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 10ஆண்டுகள் மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர், இங்கே துள்ளிக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி அவருக்கு அங்கு சல்யூட் அடித்தது. உபியில் 42 இடங்கள், பீகாரிலும் 33 இடங்கள், குஜராத்திலும் 20 இடங்கள் என இந்தியா கூட்டணி பல்வேறு மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு என கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தற்போதைய நிலவரப்படி 160 இடத்தை பாஜ தாண்டாது என கூறுவதால் தான் மோடி முகம் மாறியுள்ளது. இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்

The post ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர் மாளிகையில் மோடி ரகசிய ஆலோசனை: தேர்தல் விதி மீறியதால் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Governor's House ,RS Bharati ,Meenjoor ,Congress ,Sasikanth Senthil ,Tiruvallur ,India Alliance ,DMK ,Dinakaran ,
× RELATED வாக்குச்சீட்டு முறை கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை: பெண்கள் கைது