- நுடன பிரசரம் மொழி
- கோவை தெற்கு மாவட்டம்
- ஜனாதிபதி
- வசந்தராஜன்
- பாஜா
- பொள்ளாச்சி பாராளுமன்றம்
- பஜாஜ் நுதானா பிரசரம்
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாஜ நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் வாக்கு சேகரிக்க செல்லும் நிர்வாகிகள், ‘வாக்களர்களிடம் நீங்கள் தாமரைக்கு வாக்களிப்போம் என்று உறுதியாக சொன்னால், நாங்கள் உங்களுக்கு எஸ்பிஐ வங்கியில் ₹1 லட்சம் லோன் வாங்கி தருகிறோம்.
அதை நீங்கள் கட்ட வேண்டியது இல்லை. தேர்தல் முடிந்து வெற்றி பெற்று பாஜ ஆட்சி அமைந்தவுடன் அந்த கடனை தள்ளுபடி செய்து விடுகிறோம்,’ என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள். அவர்கள் சந்திக்கும் வாக்களர்கள் அனைவரிடமும் செல்போன் எண்ணை கொடுங்கள் என்று வலுக்கட்டாயமாக கேட்டு வாங்குகிறார்கள். ஒரு சில வாக்களர்கள் செல்போன் எண் எதுக்கு கேட்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘அதையெல்லாம் கேட்க வேண்டாம்.
நாங்கள் சொல்லும்போது உங்கள் ஜி பேவை செக் செய்து பாருங்கள்’ என்று கூறிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதிலிருந்து ஓட்டுக்கு பணம் கொடுக்க பாஜ முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறிவரும் பாஜவினர் மீது தேர்தல் அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், பறக்கும் படை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
The post ₹1 லட்சம் தர்றோம்… போன் நம்பர் கொடுங்க… பாஜ நூதன பிரசாரம் appeared first on Dinakaran.