×

பிச்சைக்கார நாடாக மாற்றிவிட்டு ரோடு ஷோ நடத்தும் மோடிக்கு 19ம் தேதி டாட்டா காட்டுங்க… சீமான் ‘நறுக்’

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று நாமக்கல், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதி தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ரோடு ஷோ நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு, வரும் 19ம் தேதி வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் தங்கள் வாக்கின் மூலம் டாட்டா காட்ட வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானியும், அம்பானியும்தான் வளர்ந்துள்ளனர். இது நாடு இல்லை, அதானி, அம்பானியின் சொந்த வீடு. நாட்டை கூறு போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இங்கு போட்டியிடும் பாஜ வேட்பாளர் (கே.பி.ராமலிங்கம்) பதவிக்காக பல கட்சிகள் மாறியவர். பதவி வேண்டும் என்றால், அவர் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்வார். அவருக்கு சொத்து எப்படி ₹95 கோடி வரை வந்தது?.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை பிச்சைக்கார நாடாக மாற்றியதை தவிர பிரதமர் மோடி செய்த வேறு சாதனை ஏதாவது உள்ளதா?. மேடையில் மக்கள் முன்பாக நின்று மக்களுக்காக இத்தனை திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என பிரதமர் மோடியால் கூற முடியுமா?. 10 ஆண்டுகளில் ஒரு முறையாவது பத்திரிகையாளர்களை சந்தித்தது உண்டா?. தற்போது 10 ஆண்டுகள் ஆட்சி செய்து ஒன்றும் செய்யவில்லை.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்துவிட போகிறார். 10 ஆண்டுகளாக மக்களுக்கு நான் சூப் கொடுத்தேன் என்கிறார் மோடி. அடுத்த 5 ஆண்டில் மக்களுக்கு விஷத்தை கொடுத்து ஒட்டுமொத்தமாக முடித்து விடுவார். அடுத்தமுறை பாஜவை வெற்றி பெறச்செய்துவிட்டால் இந்தியா என்ற ஒரு நாடு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பிச்சைக்கார நாடாக மாற்றிவிட்டு ரோடு ஷோ நடத்தும் மோடிக்கு 19ம் தேதி டாட்டா காட்டுங்க… சீமான் ‘நறுக்’ appeared first on Dinakaran.

Tags : Modi ,Seeman ,Naam Tamilar Party ,Kanimozhi ,Namakkal Parliamentary Constituency ,chief coordinator ,Rasipuram, Namakkal ,Tamil Nadu ,Tata ,Seaman ,
× RELATED சீமான் மீது நடவடிக்கை கோரி தபெதிக புகார் மனு!!