×

வழக்கில் சமரசம் செய்து கொண்டால் வெற்றி தோல்வி என்று இல்லை: சமரச விழிப்புணர்வு வார விழாவில் அரியலூர் நீதிபதி பேச்சு

அரியலூர், ஏப்.11: வழக்கில் சமரசம் செய்து கொண்டால் வெற்றி தோல்வி என்று இல்லை என்று அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் பேசினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படியும் அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வழிகாட்டுதலின்படியும் அரியலூர் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச விழிப்புணர்வு வாரம் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் அரியலூர் நீதிமன்ற வளாகத்திலிருந்து கடைவீதி , மெயின் ரோடு வழியாக அரியலூர் பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையேற்று பேசுகையில் ”வழக்கில் சமரசம் செய்து கொண்டால் வெற்றி தோல்வி என்று இல்லை. நேரம் மிச்சமாகும்.உடனடி தீர்வு கிடைக்கும்.சமரசம் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணத்தை வழக்கு தரப்பினர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் தேவையான தகவல்களுக்கு அரியலூர் மாவட்ட சமரச மையத்தையோ ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறையில் செயல்படும் வட்ட அளவிலான சமரச மையத்தையோ தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம்\”என்று கூறினார்.

இந்நிகழ்வில் அரியலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், குற்றவியல் நீதித்துறை நடுவர் அறிவு கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவல்லி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், அரியலூர் மாவட்ட சமரச மைய வழக்கறிஞர்கள் தேவேந்திரன், இளவரசன், கதிரவன்,மோகன், செந்தில்குமார், அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மனோகரன் செயலாளர் முத்துக்குமரன், வழக்கறிஞர்கள் செந்தில்ராஜா, .தனலெட்சுமி, அரியலூர் மாவட்ட நீதித்துறை பணியாளர்கள், மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட சமரச மையத்தினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், அரியலூர் நகர காவல் துறையினர் செய்திருந்தனர்.

துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன் படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளில் வேட்பாளர்களின் புகைப்படம் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய பட்டியில் பொருத்தும் பணி யினையும் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post வழக்கில் சமரசம் செய்து கொண்டால் வெற்றி தோல்வி என்று இல்லை: சமரச விழிப்புணர்வு வார விழாவில் அரியலூர் நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Principal ,District Sessions ,Judge ,Christopher ,Madras High Court ,Ariyalur Principal District Sessions ,Ariyalur District ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...