×
Saravana Stores

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்

கரூர், ஏப், 11: தமிழ்நாடு மாநில சமரச மையத்தின்அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி. கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச நாள் நேற்று கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு பேரணி கரூர் ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. பேரணியில் கரூர் அரசு மற்றும் கலைக்கல்லூரி, சாரதா நிகேதன் கல்லூரி மற்றும் அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளை கொண்டு சமரசம் பற்றிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி அண்ணா வளைவு , கரூர் மாரியம்மன் கோவில் ஜவஹர் பஜார் மற்றும் அரச மரத்தெரு வழியாக பழைய நீதிமன்ற வளாகத்தில் பேரணி முடித்து வைக்கப்பட்டது.

மேலும் இத்துடன் பொதுமக்களுக்கு சமரசம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த துண்டு பிரசுரங்களில் வழக்கு தொடுத்தவர்களுக்கும் வழக்காடு இருவருக்கும் வெற்றி என்ற உணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், 2 பேரும் சமரசம் எந்த நிலையை எட்ட வேண்டும் என்ற கருத்தை பொதுமக்களிடம் வைக்கும் நோக்கிலும், இந்தத் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய முடியாது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு இறுதியானது விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இதில் கரூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில், முதன்மை சார்பு நீதிபதி கனகராஜ், கூடுதல் சார்பு நீதிபதி கோகுல் முருகன், மாவட்ட உரிமையியல் மகேந்திரவர்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி உமாமகேஸ்வரி, நீதித்துறை நடுவர் எண் அம்பிகா, நீதிதுறை நடுவர் எண்.2 சுஜாதா, விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் நித்யா மற்றும் பார் அசோஸியேஸன் செயலாளர், அட்வகேட் அசோஸியேஸன் செயலாளர், மத்தியஸ்தர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பாக்கியம் செய்திருந்தார்.

The post கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Reconciliation Day Awareness Rally ,Karur Old Court Complex ,District Judge ,Shanmugasundaram ,Karur ,Reconciliation Day ,Tamil Nadu State Reconciliation Centre ,Karur District Reconciliation Center ,Awareness Rally ,Karur Five Road ,Reconciliation Day Day Awareness Rally ,Dinakaran ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு..!!