கரூர், ஏப்.11: கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் விளையும் அனைத்து பொருட்களுமே மிகவும் தரமானதாகவும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுவதால் பொதுமக்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக கொல்லிமலை பகுதியில் சீரகம், மிளகு, மல்லி வெந்தயம், சோம்பு ,பட்டை, கிராம்பு அதிக அளவில் விரும்பி வாங்கப்படுகிறது.
இந்நிலையில் 500 ரூபாய் கொடுத்தால் ஒரு படி வெந்தயம் சீரகம் சோம்பு மல்லி கொடுக்கப்படுகிறது. இப்பொருளை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.கரூர் மாநகராட்சி பகுதியில் சர்ச் கார்னர், வெங்கமேடு, வாங்க பாளையம் தான்தோன்றி ராயனூர் காய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பகுதியில் தனித்தனி மூட்டைகளாக நான்கு சக்கர வாகனத்தில் இருந்து இறக்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இவ்வாறு விற்பனை செய்யும் வியாபாரிகள் பூண்டு, புள் மற்றும் வேறு ஒரு சில மளிகை பொருட்களை விற்பனை செய்வதால் பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நேரடியாக வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரூ.500 கொடுத்து ஒருமுறை செட் வாங்கினால் வீட்டில் சுமார் நான்கு பேர் இருக்கும் வீட்டிற்கு 4 மாதத்திற்கு அனைத்து பயன்பாட்டிற்கும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிசெல்கின்றனர்.
The post கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.