- டிடீவி
- ஓ. பன்னீர்செல்வம்
- ராமநாதபுரம்
- அமமுக
- பொது
- டிடிவி.தினகரன்
- முதுகுளத்தூர்
- எடப்பாடி பழனிசாமி
- பிறகு நான்
- தின மலர்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ கூட்டணில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று முதுகுளத்தூரில் பேசியதாவது: தேனியில் பிரசாரத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி என்னை பச்சோந்தி என்று வாய் கிழிய பேசினார். அவர் தான் பச்சை துரோகி.
இதற்கு உதாரணம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு டெல்லியில் நடந்த பாஜ கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 330க்கும் மேற்பட்ட இடத்தில் வெற்றி பெறும் என்று கூறிய அவர், பின்பு எங்கள் இருவரையும் சேர்த்தால் அதிமுக போய்விடுமோ என்ற அச்சத்தில் பாஜ கூட்டணியிலிருந்து விலகி, தற்போது பாஜவை விமர்சித்து வருகிறார்.சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கிவிட்டு, அவரையே சூரியனை பார்த்து குறைக்கும் மிருகம் என மிருகத்தோடு ஒப்பிட்டு பேசிவிட்டு, இன்று வயதில் மூத்தவர் காலில் விழுந்தேன் என்று பல்டி அடிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் ஒரு லட்சம் ஓட்டு வாங்குவதே பெரிய விஷயம். தேனியில் ₹1,000 கொடுத்து, அவர்கள் மூன்றாம் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பாயும் என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இவ்வாறு பேசினார்.
நோட்டா கீழ் பாஜ ஓட்டு வாங்கியது உண்மை
டிடிவி.தினகரன் கூறுகையில், ‘பாஜவை விமர்சித்து விட்டு அந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என என்னை பார்த்து கேட்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தினால் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று கூறியது உண்மை தான். ஆனால் அதே போன்று ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு கீழே பாஜ ஓட்டு வாங்கியது என சொன்னது உண்மைதான். ஆனால் அன்று தனித்து நின்றோம். இன்று பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்க ஓபிஎஸ்சும் நானும் ஒன்றாக இணைந்துள்ளோம்’ என்றார்.
The post என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை துரோகி: டிடிவிக்கு கோவம் வந்துருச்சி… appeared first on Dinakaran.