×

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து

நிங்போ: சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் மலேசியாவின் கோ ஜின் வெய் உடன் நேற்று மோதிய சிந்து 18-21, 21-14, 21-19 என்ற செட்களில் போராடி வென்றார். இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது.

இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், மாளவிகா பன்சூட், கிடாம்பி காந்த், லக்‌ஷயா சென், பிரியான்சு ராஜ்வத், ருதபர்னா பாண்டா – ஸ்வேதபர்னா பாண்டா, அர்ஜூன் – துருவ் கபிலா, ஹரிஹரன் அம்சகருணன் – ரூபன்குமார் ரத்தினசபாபதி ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

The post ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து appeared first on Dinakaran.

Tags : Asian Championship Badminton ,Sindh ,Ningbo ,PV ,Sindhu ,Asian Championship Badminton Series ,China ,Ko Jin Wei ,Malaysia ,Dinakaran ,
× RELATED ₹1.30 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்த...