- மரியம்மன் கோயில் பங்கூனி விழா
- Senthamangalam
- கண்ணூர்பட்டி
- புதுச்சத்திரம்
- பங்கூனி விழா
- மாரியம்மன் கோவில்
- மாரியம்மன்
- மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
சேந்தமங்கலம், ஏப்.11: புதுச்சத்திரம் அடுத்த கண்ணூர்பட்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா, 15 நாட்களுக்கு முன்பு கம்பம் நட்டு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. கடந்த திங்கட்கிழமை இரவு, மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மறுநாள் அதிகாலை மாவிளக்கு, பொங்கல் வைத்தல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் கிடா வெட்டி, சிறப்பு பூஜை நடத்தினர். திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று(11ம் தேதி) மாலை திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
The post மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா appeared first on Dinakaran.