ஈரோடு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமக்களிடையே பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: அடுத்தவன் மொழி எப்படி உனக்கு அறிவாகும். இங்கிலீஷ் தெரிந்தால் இன்டலிஜன்ட் ஹா. பிரிட்டன்ல பிச்சைக்காரன் இங்கிலீஷ்ல பேசி தான் பிச்சை எடுப்பான். அவன் புத்திசாலியா?. அமெரிக்காவில் பள்ளிக்கூடம் போகாதவன் கூட இங்கிலீஷ் பேசுவான். அது அவன் தாய் மொழி. ஆங்கிலம் அறிவு அல்ல. ஒரு மொழி. வெள்ளை என்பது அழகு இல்லை. ஒரு நிறம். அதை புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையா இருந்தால் தான் அழகா? இருக்குதுனு நினைப்பு. இவ்வளவு பேசறேன்ல்ல சீமான். நான் மட்டும் சிவப்பா இருந்திருந்தா நான் தான் இந்திய நாட்டின் பிரதமர். உண்மையா இல்லையா?. உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள். இதுவே சாக்ரடீஸ் சொன்னார். பெர்னாட்ஷா சொன்னாரு.., அவர் சொன்னார், இவரு சொன்னார் சொன்னா நல்ல பேசுறாருனு என்னை சொல்லுவாங்க. ஆனால், நான் தான் பேசனனு சொன்னா நம்ப மாட்டான். இவ்வாறு அவர் பேசினார்.
* தேர்தல் அன்று குவாட்டர் போட்டு வீட்டுல படுங்க…
கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘நான் எனக்கு ஓட்டு போடுங்கனு சொல்லவில்லை. யாருக்கும் ஓட்டு போடாதீங்கனு தான் சொல்றேன். அப்போ என்ன அண்ணா செய்யறது. பேசமா குவாட்டர் போட்டுட்டு வீட்டுல படுங்க. ஓட்டு போட்டு என்னத்த செய்ய போறீங்க. தியேட்டர்ல போய் நல்ல படம் பாருங்க. இங்க தேர்தல் என்றால் கர்நாடகா இல்ல, ஆந்திராவில் போய் படுத்துக்கோ? நிம்மதியா இரு என பேசினார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்களிக்க இளைஞர்களை ஊக்குவித்து வரும் நிலையில், சீமானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று தவறாக இளைஞர்களை வழிநடத்தும் நபர்கள் மீதும், தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் வீட்டில் இரு என கூறும் நபர்கள் மீதும் தேர்தல் ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post உனக்கு என்னப்பா… சீமானின் அலப்பறைகள்: சிவப்பா இருந்திருந்தா… நான் தான் பிரதமர்… appeared first on Dinakaran.