- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- 5 வது கட்டம் பிரச்சார சுற்றுப்ப
- திமுக
- சென்னை
- சாரி
- 5 வது கட்டத் தேர்தல் பிரச்சாரம்
- கட்ட பிரச்சார சுற்றுப்பயணம்
- தின மலர்
சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று 5-வது கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் தொடங்குவது பற்றி திமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5-வது கட்ட பிரசாரப் பயணத்தை இன்று கன்னியாகுமரியில் தொடங்குகிறார். கடந்த 16 நாட்களில் 4 கட்ட பிரசாரப் பயணத்தில் 91 பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு, `இந்தியா கூட்டணி’ வேட்பாளர்களை ஆதரித்து, 31 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
இன்று தொடங்கும் 5-வது கட்ட பிரசாரப் பயணத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் `இந்தியா கூட்டணி’ வேட்பாளர்களை ஆதரித்து, 11 இடங்களில் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரிக்கிறார். தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரம் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தக்கலை சந்திப்பு, மாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி, நாகர்கோவில், பொன்னப்ப நாடார் திடல், வேப்பமூடு சந்திப்பு, இரவு 7 மணிக்கு நெல்லை, பஜார் தெரு, நாங்குநேரி, இரவு 8 மணிக்கு நெல்லை, சந்தை ரவுண்டானா, மேலப்பாளையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
அதைத் தொடர்ந்து 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி, தென்காசி, புதிய பேருந்து நிலையம், காலை 11 மணிக்கு தென்காசி, கடையநல்லூர், பெரிய பள்ளிவாசல் மணிக்கூண்டு, மாலை 4 மணிக்கு சங்கரன் கோவில், தேரடி வீதி, மாலை 5.30 மணிக்கு, தூத்துக்குடி, கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு, இரவு 7 மணிக்கு மாப்பிள்ளையூரணி, சந்தன மாரியம்மன் கோயில் அருகில், 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி, திருச்செந்தூர் வ.உ.சி. திடல், காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி, அண்ணாநகர் 7வது தெரு சந்திப்பு, வி.வி.டி.சாலையில் பிரசாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட பிரசார சுற்றுப்பயணம்: திமுக தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.