- ராஜஸ்தான்
- குஜராத்
- ஜெய்ப்பூர்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- குஜராத் டைட்டன்ஸ்
- ஐபிஎல்
- லக்னோ
- தில்லி
- மும்பை
- பெங்களூர்
- தின மலர்
ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 24வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்- குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. ராஜஸ்தான் ஆடிய 4 போட்டியிலும் (லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூருக்கு எதிராக) வெற்றி பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணியான ராஜஸ்தான் இன்றும் அதனை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ஜெய்ஷ்வால், பட்லர், ஹெட்மயர், ரியான் பராக் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பவுலிங்கில் போல்ட், சாஹல் மற்றும் அஷ்வின் எதிரணிக்கு கடும் நெருக்கடி தருகின்றனர். சொந்த ஊரில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.
மறுபுறம் குஜராத் 5 போட்டியில் 2ல் வெற்றி, 3 தோல்வி என பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கடைசியாகஆடிய 2 போட்டியிலும் (பஞ்சாப், லக்னோ) தோல்வி அடைந்துள்ள நிலையில் இன்று வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் கில், சாய் சுதர்சன் தவிர மற்ற யாரும் பார்மில் இல்லை. பவுலிங்கிலும் பெரிய அளவில் எடுபடாத நிலையில் இன்று ஒருசில மாற்றத்துடன் களம் இறங்கும் என தெரிகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் 4, ராஜஸ்தான் ஒரு போட்டியில் வென்றுள்ளது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்ல முடிவாக இருக்கும்.
The post 5வது வெற்றி முனைப்பில் ராஜஸ்தான்; தடைபோடுமா குஜராத்? ஜெய்ப்பூரில் இன்று மோதல் appeared first on Dinakaran.