- பாஜக
- தேவநாதன்
- காங்கிரஸ்
- சென்னை
- சிவகங்கை
- மயிலாப்பூர்
- சாஸ்வத் நிதி லிட்
- தெற்கு மட சாலை, சென்னை மயிலாப்பூர்
- தின மலர்
சென்னை: சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடுக்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்திப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்ககளை சந்தித்து பேசினார். அப்போது; சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார்.
4 மாதமாக தேவநாதன் அளித்துள்ள காசோலை திரும்பி வந்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட பி படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார்?. 125 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. சிறப்பாக செயல்பட்டு வந்த நிதிநிறுவனத்தில் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார். பாஜக வேட்பாளர் தேவநாதனை அண்ணாமலையும் தமிழிசையும் பாதுகாக்கக் கூடாது. டெபாசிட்தாரர்களுக்கு மயிலாப்பூர் நிதி நிறுவனம் சார்பில் தேவநாதன் அளித்த காசோலைகள் பணமின்றி திரும்பி வந்துவிட்டது. ரூ.525 கோடி மோசடி புகார் குறித்து தேவநாதனை விசாரிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
The post பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.