×
Saravana Stores

மோடியிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க தமிழ்நாட்டு மக்கள் அணி திரள வேண்டும்

*கீழ்கோத்தகிரியில் வேட்பாளர் ஆ.ராசா பேச்சு

ஊட்டி : மோடியிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க அனைவரும் தமிழ்நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் கீழ்கோத்தகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசினார். இந்தியா கூட்டணி சார்பில் நீலகிரி பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது படுகர் சமுதாய மக்கள் அவர்களின் பாரம்பரிய கலாச்சார உடையை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து, கீழ்கோத்தகிரி பகுதியில் அவர் பேசியதாவது: கொரோனா துயரம் நிறைந்த கஷ்டமான சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்றாண்டு கால ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்து அதற்குத்தேவையான நடவடிக்கைகளை எடுத்ததோடு பொதுமக்கள் என்ற விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.4000 வீதம் வழங்கினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதனை தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் உட்பட இந்தியாவில் உள்ள பல தலைவர்கள் கேலி, கிண்டல் செய்தனர். ஆனால், அவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள மகளிர்க்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கி தமிழ்நாட்டு மகளிர்களை கவுரவித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை தலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார். மேலும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் தற்போது செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தை உலக நாடுகள் பாராட்டி வருகிறது.

கனடா நாட்டு பிரதமர் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதை பின்பற்றி கன்னட நாட்டிலுள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தேயிலை தோட்டத்தில் உள்ள குடியிருப்புகள் 1980 ஆண்டுகளில் கட்டப்பட்டிருப்பதால் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் இதனை புதுப்பிக்கவும், புதிதாக கட்டவும் தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது.

ஆனால், இந்தியா மோடியிடம் பாதுகாப்பாக இல்லை. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் பணியை பாஜக நிச்சயம் செய்யும். மோடியிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும். இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், நாட்டை கூறு போட்டு மோடி அரசியல் நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் பொய்யை மட்டுமே பேசி வரும் மோடியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய ஒரே சக்தியாக திமுக உள்ளது. இவ்வாறு திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசினார்.

இந்த பிரச்சாரத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முபாரக், ஊட்டி எம்எல்ஏ கணேஷ், ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், பீமன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து, தேயிலைத்தோட்டம் நிறைந்த மிலிதேன், நெடுகுளா, கோடநாடு, கைக்காட்டி போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, தோட்ட தொழிலாளர்கள் அவரை ஆர்வமுடன் வரவேற்றனர். அப்போது அவர்களிடம், தனக்கு வாக்களிக்குமாறு ஆ.ராசா கேட்டுக்கொண்டார்.

The post மோடியிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க தமிழ்நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Modi ,Candidate ,A. Raza ,Kilgothagiri ,DMK ,Nilgiri ,India Alliance ,Tamilnadu ,
× RELATED மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே என...