- தொழில்
- பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்
- சென்னை
- தொழில்துறை
- செந்தில்குமார்
- தொழில் பாதுகாப்பு இயக்குனர் மற்றும்
- தின மலர்
சென்னை, ஏப்.10: நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 1358-ன் படி தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிவாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். 9444221011, 9884675712, 9884470526, 9962524442 எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
The post தேர்தல் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அறிவிப்பு appeared first on Dinakaran.