புதுடெல்லி: இப்போது 400+ பற்றி பேசுகிறார்ள். ஆனால் ஜூன் முதல்வாரம் 175ஆக குறைந்து விடும் என்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரைஷி வெளியிட்ட டிவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ தலைவர்கள் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் பாஜவை மறைமுகமாக கிண்டல் செய்யும்விதமாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி டிவிட் செய்துள்ளார்.
அதில்,’ இப்போது 400 ப்ளஸ் என்று பேசுகிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில், இது 175-200 என்ற வரம்பில் இருக்கும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றி பேசுகிறேன். ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.அவரது டிவிட்டிற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
The post நான் மாம்பழ ரேட்ட சொன்னேன்.. 400+ ஆஆ…175 கூட கிடைக்காது…முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரைஷி டிவிட்டால் சர்ச்சை appeared first on Dinakaran.