×

நடிகை ஹேமமாலினி குறித்து விமர்சனம் காங். நிர்வாகி பேச்சால் கார்கேவுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி; பாஜ எம்.பி நடிகை ஹேமமாலினிக்கு எதிராக கண்ணியமற்ற முறையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் நிர்வாகி ரந்தீப் சுர்ஜேவாலா மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரது பேச்சு குறித்து உரிய விளக்கத்தை அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் ஏப்.12ம் தேதிக்குள் கார்கேவும், ஹேமமாலினியை விமர்சனம் செய்ததற்காக நாளை மாலைக்குள் சுர்ஜேவாலாவும் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நடிகை ஹேமமாலினி குறித்து விமர்சனம் காங். நிர்வாகி பேச்சால் கார்கேவுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Hema Malini ,Kharge ,New Delhi ,Congress ,Randeep Surjewala ,BJP ,Election Commission ,
× RELATED பொய் சொல்லி இளைஞர்களை ஏமாற்ற வேண்டாம்...