பெங்களூரு: பிரசாரத்தின்போது ஒன்றிய இணையமைச்சர் ஷோபாவின் காரில் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற பாஜக தொண்டர் பிரகாஷ் (62) உயிரிழந்தார். பின்னால் இருசக்கர வாகனம் வருவதை பார்க்காமல் கார் கதவை திறக்கவே, பிரகாஷ் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த பேருந்து அவர்மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷோபாவின் காரை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஒன்றிய இணையமைச்சர் காரில் மோதி பாஜக தொண்டர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.