×

சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்

சென்னை: நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த் ,பிரபுதேவா ,மீனாட்சி சௌத்ரி, சினேகா ,லைலா, மோகன் ,ஜெயராம் ,வைபவ் ,பிரேம்ஜி ,யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை , தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது.

இறுதியாக இப்படத்தின் படப் பிடிப்பானது கேரளாவில் நடந்து முடிந்தது .அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்களை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

The post சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Tamil Nadu Vetri Kazhagam ,Sami ,Saibaba temple ,Chennai ,Venkat Prabhu ,AGS ,Yuvan Shankar Raja ,Prashant ,Tamil ,Nadu Vetri Kazhagam ,president ,
× RELATED சென்னையில் ரவுடியின் கூட்டாளிக்கு அரிவாள் வெட்டு