×

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி வாக்குபதிவு நாளன்றும், அதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் 17, 18, மற்றும் 19ம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதே போன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. அதனால் அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Chennai ,Lok Sabha ,Tamil Nadu ,Tasmac ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!