- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- புன்னக்காயல்
- கனிமொழி
- அருமுக்கனேரி
- திமுக
- தூத்துக்குடி மக்களவை
- அனிதா ராதாகிருஷ்ணன்
- முகானி
- பழைய கயல்
- சேர்ந்தபூமங்கலம்
- தின மலர்
*கனிமொழி எம்பி பேச்சு
ஆறுமுகநேரி : தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் கனிமொழி எம்.பி., முக்காணி, பழைய காயல், புன்னக்காயல், சேர்ந்தபூமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். புன்னக்காயலில் நேற்று காலை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து அவர் பேசுகையில் ‘‘ உங்களது கோரிக்கையை ஏற்று கிளை தபால் நிலையம் துணை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் 900 பேருக்கு பட்டாக்களை நானே வழங்கி உள்ளேன். எனது 2வது தாய் வீடான தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது உங்களை சந்தித்து தேவையான உதவி செய்திருக்கிறோம். அப்போது உயிரை கூட துச்சமாக நினைத்து படகுகளை எடுத்துவந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் காப்பாற்றிய உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் மீனவர்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்திருக்க கூடிய நம்முடைய முதல்வர், உங்களோடு ஒருவராக நின்று உங்களது கோரிக்கைகளை எல்லாம் உணர்ந்து செயல்படக்கூடிய ஒருவராகவும், தொடர்ந்து மீனவ மக்களுக்கும் சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் செயல்பட்டு கொண்டிருப்பவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இதேபோல் மீனவ மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு பணியாற்ற மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’’ என்றார்.
அதுபோல சேர்ந்தபூமங்கலத்தில் நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசுகையில் ‘‘மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒதுக்கீடு செய்த ரூ. 25 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது விடுபட்டுபோன அனைவருக்கும் உறுதியாக வழங்கப்படும். தேர்தலுக்கு பிறகு முகாம் அமைத்து விடுபட்டுள்ள அனைவருக்கும் வழங்கப்படும்’’ என்றார். இதனிடையே பள்ளி மாணவிகள் இப்பகுதியில் ஏற்கனவே வந்து கொண்டிருந்த பஸ் தற்போது வரவில்லை என்றும், இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த கனிமொழி எம்பி, அந்த பஸ்சை தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு முக்காணி, பழையகாயல் பகுதிகளில் வாக்குசேகரித்து அவர் பேசுகையில் ‘‘இந்தியா கூட்டணி ஆட்சி வந்த பிறகு ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். இவை அனைத்தும் நிறைவேற ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பாஜவை வீட்டிற்கு அனுப்பவேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சிகளில் ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ். தலைவர் பிரம்ம சக்தி, திமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே. ஜெகன், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் தர் ரோட்டரிக்கோ, துணை அமைப்பாளர்கள் சந்திரபோஸ், அண்ணன் மரியான், ஒன்றியச் செயலாளர்கள் ஆழ்வை கிழக்கு சதீஷ்குமார், வை கிழக்கு கோபாலம், ஒன்றிய சேர்மன் ஜனகர், ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து, மாவட்ட பிரதிநிதி மோகன், பஞ். தலைவர்கள் புன்னக்காயல் சோபியா, ஆத்தூர் கமாலுதீன், முன்னாள் தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன், வரண்டியவேல் ஜெயக்கொடி, மேலாத்தூர் பஞ்.
துணைத்தலைவர் பக்கீர் முகைதீன் ஆத்தூர் நகரச் செயலாளர் முருகானந்தம், வக்கீல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஸ்டீபன், விவசாய அணி ஆழ்வை கிழக்கு ஒன்றிய அமைப்பாளர்கள் அரவிந்தன், லிங்கராஜ், மாணிக்கவாசகம், காங்கிரஸ் ஆழ்வை வட்டாரத் தலைவர் பாலசிங், ஆத்தூர் நகரத் தலைவர் சின்னத்துரை, புன்னக்காயல் மீனவர் அணி அமைப்பாளர் விஜயன் வில்லவராயர், விசிக முன்னாள் மதுரை மண்டல செயலாளர் தமிழினியன், மமக புன்னக்காயல் செயலாளர் ரவி, நற்பணி மன்ற தலைவர் பிரிஸ்டன், செயலாளர் ஜெர்மன்ஸ், மார்க்சிஸ்ட் ஆத்தூர் நகரச் செயலாளர் முத்தையா, ஆழ்வை ஒன்றியக் குழு உறுப்பினர் திருக்காலத்தியன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் முக்காணி முத்து, விவசாய அணி ஒன்றிய துணை அமைப்பாளர் சேது குமார், ஒன்றிய அவைத்தலைவர் மாரியப்பன், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் காட்வின் ராஜா, துணை அமைப்பாளர் போஸ்கோ, ஒன்றிய அமைப்பாளர் பிரேம்சந்த், பஞ். தலைவர்கள் முக்காணி பேச்சித்தாய் என்ற தனம் பழையகாயல் செல்வகுமார், கொஞ்சம் கவுன்சிலர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post புன்னக்காயலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தீவிர பிரசாரம் மீனவ, சிறுபான்மை மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் appeared first on Dinakaran.