- அண்ணாமலை
- சீமான்
- நாதம் தமிழர் கட்சி
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- வேலூர்
- நெல்லை பா.ஜ.க
- நாயனார் நாகேந்திரன்
- தின மலர்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்களிடமிருந்து சுமார் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள். அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லையா? பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் எங்கள் தம்பி அண்ணாமலை தான் ரூ.4 கோடி பறிமுதல் செய்ததில் பதில் சொல்ல வேண்டும்.
தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையை கொடுமையாக பார்க்கிறேன். இதுவரை ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களின் பணத்தைப் பிடித்தது என்று ஏதாவது ஒன்றை காட்ட முடியுமா? ரம்ஜான் நேரம் என்பதால் ஆடு, மாடு விற்பனை செய்யும் பணத்தை எப்படி விவசாயிகள் எடுத்துச் செல்வார்கள்? இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கிறார்கள் இதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஊழல் இல்லாத அரசு என கூறும் பாஜ மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து ரூ.150 கோடி கொடுத்தது ஊழல் இல்லையா?. இவ்வாறு அவர் கூறினார்.
* ஊரானுக்கு பீப் ஊட்டி விடுவாராம்… இங்க சாப்பிட்டா கொன்னுடுவாராம்…
வேலூர் மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வாக்கு சேகரித்த சீமான் நேற்று பேசிதாவது: ஆண்டு ஒன்றுக்கு 24 லட்சம் டன் மாட்டு கறி ஏற்றுமதி செய்கிற நாடு உலகத்தில் இந்தியா. பீப் எக்ஸ்போர்ட் ஹே, இந்துஸ்தான் நெம்பர் ஒன்னு ஹே. சொன்னது யார் ஹே மோடி ஹே. ஊரானுக்கு ஊட்டி விடுவேன். இங்க உள்ளவன் சாப்பிட்டான் ஹே, கொன்னுவிடுவேன் ஹே. நீ பெரிய ஆண் மகன் தானே, வீரன்தானே அமெரிக்க அதிபர் டிரம்ப வரும்போது 7 வகைகளில் மாட்டு கறி சமைத்து எதற்கு வைத்தீர்கள்.
அவனுக்கு மட்டும் 7 வெரைட்டியில மாட்டு கறி சமைச்சு வைக்குறது. ஏழைங்க நிறைஞ்சு சாப்பிட்டா கொன்னுடுறது. பல கோடி பேர்கள், பச்சிளம் குழந்தைகள் பசியோடு உறங்க செல்கிறார்கள். இனி தேசத்தில் அது நடக்காது என சொல்ல முடியுமா? இந்தியா மாட்டுகறி ஏற்றுமதி செய்வது எங்கு? அவ்வளவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடு. அவன் காசு இனிக்கும். இதுதான் இவனோட நிலைமை. இவனுங்கள ஒழிக்காம இனி ஒன்னும் பண்ண முடியாது. இவ்வாறு பேசினார்.
The post ‘ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம்’ என சொன்னாரே… இப்ப சிக்கிய ரூ.4 கோடிக்கு அண்ணாமலைய பதில் சொல்ல சொல்லுங்க…பாயின்ட்டை புடிச்ச சீமான் appeared first on Dinakaran.