- மாவட்ட தேர்தல் அதிகாரி
- சென்னை
- சென்னை கார்ப்பரேஷன்
- ஆணையாளர்
- ராதாகிருஷ்ணன்
- சென்னை மெரினா கடற்கரை
- தேர்தல் ஆணையம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பங்களை சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவருமான ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது கடற்கரைக்கு வந்த மக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் சார்பாக எடுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், இது குறித்து அவர் அளித்த பேட்டி:
சென்னையில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் சராசரி வாக்குப்பதிவு 73% இருந்தது. இந்திய அளவில் 67% இருந்தது. சென்னையை பொறுத்தவரை தெற்கில் 58 சதவீதமும், மத்திய சென்னையில் 58.7 விழுக்காடும், வடக்கில் 64.1 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஐபிஎல் போட்டிகளுக்கு வெளியே விளம்பரப் படுத்துவது, மால்களில் விளம்பரப்படுத்துவது, செல்பி பாயிண்ட் உள்ளிட்டவை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
228 ஏழை எளிய மக்கள் கூடும் மையங்களும், பணி சுமை காரணமாக சுணக்கம் காணப்படுகிறது. அவர்களுக்கு எங்கே பூத் உள்ளது என்பது தெரியாது. அவர்களிடம் எந்த பகுதியில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.18 வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் . தேர்தல் தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் விடுமுறை அளிக்காமல் பணிக்கு வரவழைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், வீட்டு வேலை செய்யும் நபர்களையும் பணிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த முறை அவர்களுக்கும் விடுப்பு அளிக்கப்படும். இது குறித்து பூத் வாரியாக கண்காணிக்கப்படும். உரிய ஆவணங்களுடன் நகைகள் எடுத்துச் சென்றால் அவை திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகிறது . இந்த நேரத்தில் அனைத்தையும் சோதனை செய்ய வேண்டியது கட்டாயம். என் வாகனத்தையே அவர்கள் சோதனை செய்தார்கள்.
அவர்களுக்கு நான் உரிய ஒத்துழைப்பை கொடுத்தேன். ஏடிஎம் அல்லது வங்கிகளில் பணம் எடுத்துச் செல்லும் பொழுது அதற்கான ஆதாரத்தை கையில் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அடையாள அட்டையை தொடர்ந்து கையில் வைத்திருக்க வேண்டும் .
எங்களுக்கு தேர்தல் ஆணையம் இவிஎம் மிஷினில் எந்த ஒரு தவறும் இல்லை என கூறி இருக்கிறது. அதன்படி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி நாங்கள் கருத்து கூற முடியாது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்கு இயந்திரம் அனுப்பப்பட்டிருக்கிறது இவ்வாறு தெரிவித்தார்.
The post தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை appeared first on Dinakaran.