- டி. நகர் பஸ் ஸ்டாண்ட்
- தென் சென்னை
- பாஜக
- தமிழிசாய் ச Sound ந்தரராஜன்
- சென்னை
- கனு நகர்
- எம்.ஜி.ஆர் நகர்
- அஜந்தா பேருந்து நிலையம்
- விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி
சென்னை, ஏப்.7: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று மாலை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணு நகர், எம்ஜிஆர் நகர், அஜந்தா பேருந்து நிலையம், கே.கே.சாலை பிள்ளையார் கோயில் தெரு, வாசுதேவன் நகர், பாரதிதாசன் காலனி, புவனேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின் போது, தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தி.நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்குவது, குப்பை அகற்றுவது போன்ற அடிப்படை பிரச்னைகளை பற்றி பலர் என்னிடம் குற்றம்சாட்டுகின்றனர். தி.நகர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டனர். அந்த பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன். தென் சென்னையின் தேவைகளை நிறைவேற்ற மக்கள் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.
நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் போட்டியிடுகிறேன். சில பகுதிகளில் மருத்துவமனை கேட்கிறார்கள். நகர்ப்புற ஏழை பெண்களுக்கு சில திட்டங்களை கேட்டுள்ளார்கள். மக்கள் அலைவதை தடுக்கும் வகையில், இந்த தொகுதியில், ஒவ்வொரு சட்டமன்ற தொதியில் ஒரு நாடாளுமன்ற அலுவலகத்தை திறப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தி.நகர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி appeared first on Dinakaran.