உடுமலை, ஏப்.7: உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இடநெருக்கடியை தவிர்க்க, அருகே உள்ள இடத்தில் ரூ.3.75 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடந்து வருகிறது. 2 தளங்களுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. பிரதான கட்டிட பணிகள் முடிந்துள்ளன.இதையடுத்து, கட்டிட சுவர்களில் வண்ண ஓவியங்களை தீட்டும் பணி நடந்து வருகிறது.
திருவள்ளுவர், யானை, பொங்கல் திருவிழா, ஜல்லிக்கட்டு, மயில், தேர், நாட்டியம், பொய்க்கால் குதிரை, தமிழர்களின் பாரம்பரிய விருந்தோம்பல், கோயில்கள் என அனைத்து ஓவியங்களும் தமிழ்நாடு என்ற பெயரில் வரையப்படுகின்றன.இதனால் புதிய பேருந்து நிலையம் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும், புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் திறக்கப்படும் என தெரிகிறது.
The post வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம் appeared first on Dinakaran.