×

வாக்குச்சாவடி மையங்களில் கமிஷனர் ஆய்வு

திருப்பூர், ஏப்.7: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையங்களில், தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் தேவைப்படுகிற வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதவிர குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார்.

The post வாக்குச்சாவடி மையங்களில் கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur South Assembly Constituency ,Centers ,Dinakaran ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது