×
Saravana Stores

காற்றில் பறக்க விடலாம்; பாஜ தேர்தல் வாக்குறுதி காய்ந்து போன சருகு: அமைச்சர் தாறுமாரு

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தேர்தல் வாக்குறுதி காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஒன்றும் இல்லை. அதனை காற்றில் பறக்க விடலாம். காங்கிரஸ் பேரியக்கம் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக ஒரு வாரத்திற்கு முன்னால் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பாருங்கள். அனைத்து விஷயங்களையும் இணைத்து, திமுகவின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இடம் பெற்றுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலி ரூ.400 ஆக வழங்கப்படும், ஜிஎஸ்டி மறு ஆய்வு செய்வோம் என்று கூறியிருப்பது வியாபாரிகள், சாதாரண மக்களுக்கு உதவும்.

எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற வார்த்தை அவர்களது வாயில் இருந்து வருவதில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற பணியை மதத்தை வைத்து செய்கின்றனர். விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்ற பிரச்னைகளில் மக்களின் சிந்தனை ஓட்டம் சென்று விடக்கூடாது என்று மத உணர்வை தூண்டுகின்ற பணியை நாடு முழுவதும் செய்து வருகின்றனர். அதிமுகவினர் அவர்களது இயக்கத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்பதை கூற வேண்டும். பெட்ரோல், கேஸ் விலை, டீசல் விலை மோடி ஆட்சி யில் எப்படி உள்ளது.

The post காற்றில் பறக்க விடலாம்; பாஜ தேர்தல் வாக்குறுதி காய்ந்து போன சருகு: அமைச்சர் தாறுமாரு appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister ,Tharumaru ,Tamil Nadu ,Dairy ,Mano Thangaraj ,Pachiparai, Kumari district ,Congress party ,
× RELATED அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட...