- பாஜக
- அமைச்சர்
- டிஆர்பி மன்னர் டேவிட்
- கோயம்புத்தூர்
- தமிழ்
- தமிழ்நாடு
- டி.ஆர்.பி ராஜா
- தேர்தல் பறக்கும் அணியில்
- விமானப்படை
- ட்விட்டர்
- டிஆர்பி ராஜா டிவிட்
- தின மலர்
கோவை: கோவையில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் கார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் அடிக்கடி சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. நேற்றும் அவரது காரை, பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இது பற்றி அவர் டுவிட்டர் வலைதளத்தில் பதிவு செய்துள்ள தகவல் வருமாறு: எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளின் பணி அதுவே என்று, அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை. அந்த கடமையில் இருந்து நான் தவறுவதில்லை. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல. அதிகார போதையில் பாஜவினர் அதிகாரிகளை மட்டுமல்ல, பொதுவாக மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள். இவ்வாறு டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பாஜ திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை சோதனை செய்ய முயன்றபோது அவர் மரியாதையாக பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்த நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் இந்த டுவிட் கவனத்தை பெற்றுள்ளது.
The post தினமும் எனது கார் சோதிக்கப்படுகிறது; அதிகார போதையில் பாஜவினர் அதிகாரிகளை மிரட்டுகின்றனர்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா டுவிட் appeared first on Dinakaran.