×

எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும் என்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு மண்ணில் வாழும் தீவிரவாதிகளை அழிக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும், அந்த வகையில் பாகிஸ்தானில் கடந்த 2020 முதல் 20 தீவிரவாதிகளை இந்தியா கொன்றதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

அதேநேரம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பபாக பேசப்பட்ட நிலையில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘அவர்கள் (தீவிரவாதிகள்) பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றால், அவர்களைக் கொல்வதற்காக நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவோம். அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது. யாராவது இந்தியாவுக்குள் நுழைந்து தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்க முயன்றால், அவர்களை விட்டுவைக்க மாட்டோம்’ என்றார்.

The post எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : INDIA ,PAKISTAN ,EU DEFENCE ,MINISTER ,New Delhi ,Union Defence Minister ,Rajnath Singh ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா