டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும், பா.ஜ.க.வின் வணிகமயமான, மத ரீதியிலான கல்வித் திட்டங்கள் திரும்பப் பெறப்படும், நிதி ஆயோக்கை கலைத்துவிட்டு, திட்டக்குழு மீண்டும் ஏற்படுத்தப்படும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாகவும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.700-ஆகவும் உயர்த்தப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.