- ஆர்.கே. நகர்
- திமுக
- கல்நதி வீரசாமி
- தண்டாயர்பேட்டை
- மேற்கு சென்னை
- கலாநிதி வீராசாமி
- ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி
- இருசப்பா மேஸ்திரி தெரு
- பொன்னுசாமி தெரு
- குறுக்கு சாலை
- புதுவண்ணாரப்பேட்டை
தண்டையார்பேட்டை: வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு பகுதி 39, 43வது ஆகிய வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அந்தவகையில், புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெரு, பொன்னுசாமி தெரு, கிராஸ் ரோடு, வெங்கடேசன் தெரு, மார்க்கெட், பாரம்தெரு, ஆவூர் முத்தையா மேஸ்திரி தெரு, புஜ்ஜம்மாள் தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, எஸ்என்செட்டி சாலை, வள்ளுவன் நகர், பாரதி நகர், மங்கம்மாள்தோட்டம், வீரராகவன் சாலை, அசோக் நகர், தனபால் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுமனை குப்பம் சலவைத்துறை, காசிமேடு காசிமா நகர், சிஜி காலனி, பல்லவன் நகர், ஓத்தவாடை, திடீர் நகர், ஜீவரத்தினம் சாலை, விநாயகபுரம் மெயின் ரோடு, தண்டையார்நகர், கும்மாளம்மன் கோயில் தெரு, தாண்டவராயன் கிராமணி தெரு, எஸ்என் செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, வேட்பாளர் வீராசாமி பேசியது: முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை, காலை சிற்றுண்டி திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை நன்கு அறிவீர்கள். மழை வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிறேன். சிந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த பகுதியில் அங்கன்வாடி மையம், மாநகராட்சி பள்ளி சீரமைப்பு, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிப்பேன்” என்றார்.
பிரசாரத்தில், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், பகுதி செயலாளர் லட்சுமணன், வட்ட செயலாளர்கள் கதிரேசன், கஜேந்திரன், போத்துராஜா, வடிவேல், மாநகராட்சி உறுப்பினர் தேவி, கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சௌந்தர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், வேம்புலி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post ஆர்.கே.நகர் பகுதி மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம்: திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி உறுதி appeared first on Dinakaran.