- திண்டிவனம்
- வந்தவாசி யூனியன்
- அதிமுக
- ஜி.வி.கஜேந்திரன்
- வந்தவாசி
- ஆரணி
- வந்தவாசி கிழக்கு
- மத்திய
- வெஸ்டர்ன் யூனியன்
- நாகாரி
- தின மலர்
*அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் உறுதி
வந்தவாசி : ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் நேற்று வந்தவாசி கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது, வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் பேசியதாவது:ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செய்து காட்டியுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த எடப்பாடி பழனிசாமியும் அதேபோல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி எப்போதும் மக்கள் ஆட்சியாக நடத்தினார்.
இன்று பாஜக நம்மை நசுக்க பார்க்கிறது. அதற்கு அடிபணியாமல் தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நமக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்தாலும் எந்த விதமான சலசலப்பிற்கும் அஞ்சாமல் செயல்படும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையான இருந்து தொண்டர்கள் பணியாற்றினால்தான் ஜெயலலிதாவின் ஆன்சா சாந்தி அடையும்.
எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம்- நகரி ரயில் பாதை திட்டத்தை துரிதப்படுத்தி வந்தவாசி மக்கள் ரயிலில் பணயம் செய்ய ஏற்பாடு செய்வேன். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவேன். மகளிர் உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்க தொழிற்சாலைகள் கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார். இதில், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சத்தியவாடி கே.பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் விமலா, முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் டிகே.பி.மணி, பொருளாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.லோக்கேஷ்வரன், ஏ.முனுசாமி, நகர செயலாளர் எம்.பாஷா, பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் எம்.சக்கரபாணி, ஜெசிபி ராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட முன்னாள் தலைவர் ஜெ.பாலு, பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.லதா குமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைத்தலைவர் ஏ.ராஜேஸ்குமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் எம்.நாகரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி ராமச்சந்திரன், மகளிர் அணி பவானி சுப்பிரமணியன், ஒசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வேணுகோபால், நகர துணை செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் சேகர், தேமுதிக எஸ்டிபிஐ, இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
The post வந்தவாசி ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு திண்டிவனம்- நகரி ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துவேன் appeared first on Dinakaran.