- தலைமை தேர்தல் ஆணையர்
- இந்தியா
- சென்னை
- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராஜீவ் குமார்
- ஆணையர்கள்
- கயனேஷ் குமார்
- சுக்பீர் சிங்
- தின மலர்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் குறைவான வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிப்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர்கள் கயனேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து தலைமையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு நடைபெறுகிற தொகுதிகளில் உள்ள நகரங்களில் வாக்குப்பதிவை அதிகரிப்பது, வாக்குப்பதிவு தினத்தில் வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்’ குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அலுவலர் காந்த் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு நடந்த வாக்குச்சாவடி மையங்களை கண்டறிய வேண்டும். அங்கு குறைவான வாக்குப்பதிவு நடக்க காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தி, அந்த மையங்களில் பயமின்றி மக்கள் வாக்களிக்க ஏற்பாடுசெய்ய வேண்டும். வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புறநகர் மற்றும் கிராமங்களைவிட நகர் பகுதிகளில், குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு குறைவதால் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிப்பது எப்படி? இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை appeared first on Dinakaran.