உடுமலை, ஏப். 6: திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்தில் முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் தாலுகாவிலும், வெள்ளகோவில்,குண்டடம், உடுமலை பகுதிக்கு தண்ணீர் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் திருட்டை தடுக்க முதல் மண்டல பாசன கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இரவில் போலீஸ் பாதுகாப்புடன் தனிக்குழுவினர் அரசூர் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர்.
The post பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.