×
Saravana Stores

குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா

ஊட்டி, ஏப்.6: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா ஒரு மாத காலம் நடைபெறும். இந்நிலையில், நடப்பு ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆழ்வார்பேட்டை கோதண்டராமர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் அபிஷேக பொருட்கள் ஊர்வலம், அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று 6ம் தேதி திருப்பூச்சாற்று, 7ம் தேதி கரக ஊர்வலம், 8ம் தேதியில் இருந்து உபயதாரர்கள் சார்பில் பல்வேறு அலங்காரங்களில் தேர்பவனி நடக்கிறது. 14ம் தேதி பூ குண்டம் இறங்குதல், 16ம் தேதி திருத்தேர் ஊர்வலம், 20ம் தேதி புஷ்ப பல்லக்கு நடக்கிறது. வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இதனால் முத்து பல்லக்கு நிகழ்ச்சி மே 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

The post குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Coonoor Thandi Mariamman Temple Festival ,Coonoor ,Nilgiris ,Thandi Mariamman ,Chitrai ,Alvarpet Kothandaram ,
× RELATED புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமான பணி ஆய்வு