×

கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய நீரை பகிர்ந்தளிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: கூட்டாட்சிதத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீரை பகிர்ந்தளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு வழக்கம் போல் மறுப்பு தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த 2 மாதங்களாக நீர்பங்கீட்டில் சுமுக நிலை இல்லை. அதாவது 5 டி.எம்.சிக்கு பதில் 1.6 டி.எம்.சி அளித்திருப்பது போதுமானதல்ல என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். கர்நாடக அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனதுதான் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் தண்ணீர் தேவைதான். தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும். எனவே, தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய நீரை பகிர்ந்தளிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,GK Vasan ,Karnataka government ,CHENNAI ,Tamil State Congress Party ,President ,Cauvery ,Cauvery Management Commission ,Delhi ,
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...