×

கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஞா.தன்ராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் ஜுடித் டேனியல் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஞா.தன்ராஜ் விருட்சங்களின் விழுதுகளாய் வளரப்போகும் வருங்காலத் தலைவர்களே என குழந்தைகளை வாழ்த்தி பேசினார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து குழந்தைகளுக்கும் பட்டமளிப்பு சான்று மற்றும் பரிசுகளை வழ்ங்கினார். இந்த விழாவை முன்னிட்டு அனைத்து குழந்தைகளும் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். பிறகு மழலை பிஞ்சுகளின் நடனங்கள் காண்போரை மகிழ்ச்சியடையச் செய்தது. இதை தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

The post கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Christ King Matriculation Secondary School ,Thiruvallur ,Christ King Matriculation Higher Secondary School ,Manavalanagar ,Dhanraj ,Principal ,Judith Daniel ,Ng. Dhanraj ,Kindergarten graduation ,Christ King Matric Higher Secondary School ,Dinakaran ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...