×

10 ஆண்டுகளாக அதிமுக-பாஜ கூட்டு போட்டு துரோகம்; ஜூன் 4க்கு பின் மோடி செல்லா காசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி

தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா,நாகை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: உலகத்திலேயே இப்படி முதலமைச்சரான ஒரு ஜென்மத்தை பாத்திருக்கீங்களா? (எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா காலில் விழுந்த படத்தை பொதுமக்களிடம் காட்டினார்) கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், மானம் இல்லாம, சூடு இல்லாம, ஒரு அம்மாவோட காலை பிடித்து முதலமைச்சராகி அதை இப்ப பெருமையாவும் சொல்லிக்கிறார்.

இப்ப அந்த அம்மா காலையே வாரி விட்டவர் தான் பாதம்தாங்கி பழனிசாமி. சசிகலாவிற்கு மட்டும் துரோகம் பண்ணவில்லை. ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கே பாதம் தாங்கி பழனிசாமி துரோகம் பண்ணியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜ அரசோட பாதம்தாங்கி பழனிசாமி கூட்டணி வச்சுக்கிட்டு தமிழ்நாட்டு மாநில உரிமைகள் அத்தனையும் விட்டுக்கொடுத்து விட்டார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிச்சயமாக விலக்கு கொடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். நம் மாநில உரிமைகளை கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடம் அதிமுக அடிமைகள் அடகு வைத்து விட்டனர்.

அதை மீட்டெடுக்க வேண்டும். கொரோனா நோயாளிகளை நேரில் சென்று பார்த்து தரமான மருந்துகள் கொடுக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்த இந்தியாவிலேயே தைரியமான ஒரே முதல்வர் நமது முதல்வர் தான். ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் எடுத்துக் காட்டாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு. உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய முதலமைச்சர் தான் ஸ்டாலின். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யாத மோடி தற்போது தேர்தல் காலம் என்பதால் அடிக்கடி வந்து செல்கிறார். அவர் தமிழ்நாட்டிலேயே வீடு பிடித்து தங்கினாலும் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் கூட பாஜ வெற்றி பெற முடியாது என்பதே உண்மையான களநிலவரம் ஆகும். ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் மோடி செல்லா காசுதான். இவ்வாறு அவர் பேசினார். இவ்வாறு அவர் பேசினார்.

The post 10 ஆண்டுகளாக அதிமுக-பாஜ கூட்டு போட்டு துரோகம்; ஜூன் 4க்கு பின் மோடி செல்லா காசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி appeared first on Dinakaran.

Tags : ADMK-BJ ,Modi ,Minister ,Udayanidhi Stalin ,Thanjavur Constituency ,DMK ,Murasoli ,Mayiladuthurai ,Congress ,Sudha ,Nagai ,Selvaraj ,Pattukottai, ,Mannargudi ,Kumbakonam ,Thiruvarur ,Udhayanidhi Stalin ,Chief Minister ,Edappadi… ,AIADMK-BJ ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக...