- காங்கிரஸ்
- மத்திய அமைச்சர்
- ராஜீவ் சந்திரசேகர்
- திருவனந்தபுரம்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- பாஜக
- ராஜீவ் சந்திரசேகர்
- மாநில மத்திய அமைச்சர்
- தொகுதியில்
- தின மலர்
திருவனந்தபுரம்: சொத்து விவரங்கள் முழுவதையும் தாக்கல் செய்யாததால் திருவனந்தபுரம் பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் பாஜ சார்பில் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் சொத்து விவரங்கள் முழுவதையும் தாக்கல் செய்யாததால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் காங்கிரஸ் தலைவியான அவனி பன்சால் திருவனந்தபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது: திருவனந்தபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் தன்னுடைய சொத்து விவரங்கள் முழுவதையும் தாக்கல் செய்யவில்லை.
கடந்த 2001-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரி வரம்புக்குள் வந்த வருமானம் ரூ.680 மட்டும் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது தவறாகும். ரூ.28 கோடி மட்டுமே தன்னுடைய சொத்து மதிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நடத்திவரும் ஜூபிடர் கேப்பிட்டல் என்ற நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் குறித்த விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. ராஜீவ் சந்திரசேகருக்கு பெங்களூருவில் ஒரு வீடு உள்ளது. ஆனால் அது குறித்து அவர் மனுவில் தெரிவிக்கவில்லை. எனவே தவறான தகவல் அளித்துள்ள ராஜீவ் சந்திரசேகரின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் சந்திரசேகரின் பெங்களூருவிலுள்ள வீட்டுக்கான வரி கட்டிய ரசீதையும் அவனி பன்சால் தன்னுடைய புகாருடன் இணைத்துள்ளார்.
The post சொத்து விவரங்கள் முழுவதும் தாக்கல் செய்யவில்லை; ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.