×
Saravana Stores

நாடாளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு

 

பெரம்பலூர், ஏப்.5: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில், வடக்கு மாதவி, லாடபுரம், களரம் பட்டி கிராமங்களில் துணை ராணுவத்தினரு டன் காவல்துறையினர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின் படி, தமிழகத்தில் 39 நாடாளமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19ம்தேதி 18வது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இந்திய துணை ராணுவமான, மத்திய சேமக் காவல் படையினர் (CRPF) மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையி னர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மேலும் இந்த கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி காலையில் பெரம்பலூர் வடக்குமாதவி கிராமத்தி லும் மாலையில் லாடபுரம், களரம்பட்டி ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச் சாமி,(ஆயுதப்படை) சோமசுந்தரம் மற்றும் மத்திய சேமக்காவல் படை டிஎஸ்பி ஹேம்ராம் மற்றும் காவலர் கள் கலந்துகொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Flag parade to vote ,PERAMBALUR, ,PERAMBALUR DISTRICT ,SP ,SHYAMLA DEVI ,FLAG PARADE ,NORTH MADAVI ,LADAPURAM ,KALARAM ,PATTI ,VILLAGES ,Election Commission of India ,Flag march ,Dinakaran ,
× RELATED போதைக்கு எதிராக எஸ்பி விழிப்புணர்வு