×

புதுவை முதல்வர் ரங்கசாமி, வாக்காளர்களை மிரட்டும் பாஜ அமைச்சர், எம்எல்ஏக்கள்: மாஜி முதல்வர் பகீர்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மின்துறையை அதானியிடம் ஒப்படைப்பதற்கு அனுமதிக்காவிடில் முதல்வர் பதவியை பறித்துவிடுவோம் எனக்கூறி பாஜ முதல்வர் ரங்கசாமியை மிரட்டி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு கையெழுத்து வாங்கியுள்ளனர். மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மின்துறை ஊழியர்கள் வாக்களிக்கலாமா?.

கல்வித்துறையில் விதிமுறைகளை மீறி ஆசிரியர் இடமாறுதலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அமைச்சர் நமச்சிவாயம் கல்வித்துறையை சீரழித்துவிட்டார்.துச்சேரியில் முதல்வர் வீட்டருகே கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அரசு மூலமாக இலவச திட்டங்கள் வழங்கப்படாது என மக்களை மிரட்டி 2 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக தேர்தல் துறைக்கு புகார் அளிக்க உள்ளோம் என்றார்.

The post புதுவை முதல்வர் ரங்கசாமி, வாக்காளர்களை மிரட்டும் பாஜ அமைச்சர், எம்எல்ஏக்கள்: மாஜி முதல்வர் பகீர் appeared first on Dinakaran.

Tags : Puduwa ,Chief Minister ,Rangasamy ,BJP ,Former Chief Minister ,Bagheer ,Former ,Puducherry ,Narayanasamy ,Adani ,
× RELATED புதுச்சேரியில் கூட்டணிக்குள் சில...