- இந்தியா
- 19வது
- மோடி அரசு
- Jawahirullah
- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
- மனிதநேய மக்கள் கட்சி
- சித்தூர் வாசல்
- குடியாட்டம்
- வேலூர் மாவட்டம்
- திமுக
- வேலூர்
- மக்களவை
- கதிர் ஆனந்த்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, நேற்று வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது: இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. சிறுபான்மை மாணவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்காக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப்பை மோடி அரசு நிறுத்திவிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். மோடி அரசு ரத்து செய்த அந்த உதவித்தொகையை தமிழ்நாடு அரசு வரும் கல்வி ஆண்டில் தமிழக அரசே தருவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் பாஜ அரசை வீழ்த்த வேண்டும். சிஏஏ சட்டத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி அரசு உறுதுணையாக இருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். வரும் 19ம் தேதி பாஜ மோடி அரசு கதவை மூடும் நாள். இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலை 19ம் தேதி மோடி அரசு கதவு மூடப்படும் நாள்: ஜவாஹிருல்லா பேச்சு appeared first on Dinakaran.